திரேலியாவிற்குள் படகின் மூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல முனைந்த இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த படகு பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அவுஸ்திரேலிய கடற்படையினரால் அஸ்மோர் தீவுகளுக்கு அருகில் தடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரடன் ஓ கொனர் தெரிவித்துள்ளார்.
இந்த படகில் 52 அரசியல் தஞ்சம் கோரியவர்களும், 3 படகு செலுத்துனர்களும் இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள், அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தடுப்பு முகாமான கிரிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் அடையாள உறுதிப்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டில் மாத்திரம் இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய 18 படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த படகுகளில், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น