วันศุกร์ที่ 28 สิงหาคม พ.ศ. 2552

முறியடிக்கப்பட்ட பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கக்கூடாது: கோத்தபாய ராஜபக்ச



முறியடிப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரீ 623 ஐ 'சயு ரல" என பெயரிடப்பட்டு கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கடற்படைக் ரோந்துக் கப்பல் ஒன்றை இன்று கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். திருகோணமலை, கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு செயலாளர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எதிர் காலத்தில், கடற்படையினரிடம், பாரிய பொறுப்பினை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பயிற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டினுள் ஊடுருவுதல், மற்றும் ஆயுத கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணிகளை கடற்படையினர் முனைப்புடன் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் அங்கு வலியுறுத்தினார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น