วันพุธที่ 26 สิงหาคม พ.ศ. 2552

ஆங்கிலத்தில் ரோஜா


மணிரத்னம் எத்தனை படங்கள் இயக்கினாலும் ரோஜாவுக்கு மட்டும் தனிப் பெருமை உண்டு. இதில்தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இன்று அவர் உலகப்புகழ் பெற்றது இன்னும் வசதியாகப் போய்விட்டது. இந்தியாவில் மட்டுமே புகழ்பெற்றிருந்த இந்தப் படம் இப்போது ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு ஹாலிவுட்டுக்குப் போகவிருக்கிறதாம். இந்தத் தகவலை அறிந்த ரஹ்மான் இவ்வளவு பிசியிலும் ஒரு காரியம் செய்ய முன்வந்திருக்கிறார். பாடல்களை அப்படியே விட்டுவிட்டு பின்னணி இசையில் சிறு மாற்றங்களைச் செய்யப் போகிறாராம். தலைப்பு அதேதானா, அல்லது மாறுமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழ்ப் படம் ஒன்று ஹாலிவுட்டில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น