
இலங்கையில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்து தலைவர் ஒருவர் உட்பட மூன்று பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார்
பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்களான டோஜி மற்றும் சித்திக் ஆகியோரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்படி பாதாள உலகக் கோஷ்டியினர் பதுங்கியிருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது குறித்த மூவரும் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக அறிவிக்கபட்டுள்ளது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น