யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் வருகை விரிவுரையாளரும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகரும் இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என்.சிவராஜா நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். மருத்துவபீட மாணவன் ஒருவரே பேராசிரியரை கத்தியால் குத்தியதாகவும் தனக்கு சரியான தேர்வு மதிப்பெண் தரப்படவில்லை எனக்காரணம் கூறியே குறித்த மாணவன் மேற்படி கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் மருத்துவபீட வளாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கலாநிதி சிவராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது வயிற்றுப்பகுதி கை வாய்ப்பகுதி ஆகியவற்றில் மூன்று குத்துக் காயங்கள் காணப்பட்டன என யாழ். வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். கலாநிதி என். சிவராஜா மீதான கத்திக்குத்து தாக்குதல் யாழ். பல்கலைக்கழகத்திலும் மற்றும் யாழில் பரவலாகவும் பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளன. วันจันทร์ที่ 24 สิงหาคม พ.ศ. 2552
வைத்தியகலாநிதி பேராசிரியர் என்.சிவராஜா கத்திக்குத்திற்கிலக்கானார்
யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் வருகை விரிவுரையாளரும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகரும் இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என்.சிவராஜா நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். மருத்துவபீட மாணவன் ஒருவரே பேராசிரியரை கத்தியால் குத்தியதாகவும் தனக்கு சரியான தேர்வு மதிப்பெண் தரப்படவில்லை எனக்காரணம் கூறியே குறித்த மாணவன் மேற்படி கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் மருத்துவபீட வளாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கலாநிதி சிவராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது வயிற்றுப்பகுதி கை வாய்ப்பகுதி ஆகியவற்றில் மூன்று குத்துக் காயங்கள் காணப்பட்டன என யாழ். வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். கலாநிதி என். சிவராஜா மீதான கத்திக்குத்து தாக்குதல் யாழ். பல்கலைக்கழகத்திலும் மற்றும் யாழில் பரவலாகவும் பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளன.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น