วันอาทิตย์ที่ 30 สิงหาคม พ.ศ. 2552

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்குப் பதில் பிரதமர் பங்கேற்பு


அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கலந்து கொள்வார் என இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், "80 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச, தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஒரு சிறு குழுவுடன் இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர், பிரதமரின் செயலாளர் மற்றும் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் பிரதமருடன் நியூயோர்க் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது" என்று மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น