วันจันทร์ที่ 24 สิงหาคม พ.ศ. 2552

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மன்னார் யாழ்.மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரையும் இரு வாரகாலப் பகுதியில் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல். அமைச்சர் ரிஷா


வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மன்னார் மற்றும் யாழ்.மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரையும் எதிர்வரும் இரு வாரகாலப் பகுதியில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் நேற்றுத் தெரிவித்துள்ளார். மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை யாழ்.குடா நாட்டில் மிதிவெடியகற்றப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் இரு வாரகாலப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น