
தனிநபராக உலகை சுற்றி படகில் வலம்வந்தவர்களில் குறைந்த வயதுடையவர் என்ற பெருமையை 17 வயது பிரிட்டிஷ் இளைஞர் பெற்றுள்ளார்.
மைக் பெர்ஹாம் என்ற இந்த இளைஞர் கடந்த வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தபோது இவருக்கு பதினாறு வயதுதான் ஆகியிருந்தது.
இங்கிலாந்தின் தென்மேற்கு முனையை இன்று கடந்ததன் மூலம் அவரது உலக வட்டத்தின் முழுச் சுற்று முற்றுப்பெற்றுள்ளது.
தனிநபராக இவர் மேற்கொண்ட ஐம்பதாயிரம் கிலோமீட்டர் கடற்பயணத்தில் பல சிரமங்களை அவர் மேற்கொண்டிருந்தார்.
சில சமயம் இவரால் அரை மணி நேரம் மட்டுமே தூங்கமுடிந்திருந்தது, ஒரு முறை படகு கவிழ்ந்ததையும், பாய்மரம் கிழிந்ததையும் இவர் சமாளிக்க வேண்டிவந்தது.
ஒரு தடவை 15 மீட்டர் உயரம் கொண்ட அலைகளின் ஊடாகவும் இவர் பயணிக்க வேண்டிவந்திருந்தது. வரலாற்றில் உலகைச் சுற்றி தனியாக படகுப் பயணம் செய்தவர்கள் 250 பேருக்கும் குறைவானவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น