முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் கமல். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டுள்ளது.
கமல் நடித்துள்ள உன்னைப்போல் ஒருவன் படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் முதல்வர் பாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த ரோலில் யாரையும் நடிக்க வைக்காமல், முதல்வர் கருணாநிதியின் குரலை இடம்பெறச் (மிமிக்ரி?) செய்துள்ளார் கமல். மேலும் முதல்வரின் கோபாலபுரம் வீடும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
முதல்வரின் அனுமதி பெற்றே கமல் இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் வீடு திரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறை.
இந்த நிலையில் தனது படம் வெளியான ஒரு வாரம் கழித்து முதல்வரைச் சந்தித்தார் கமல் . முதல்வரின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டாராம்.

ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น