วันเสาร์ที่ 26 กันยายน พ.ศ. 2552

புலிகள் உறூப்பினரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை


பல்வேறு குண்டு வெடிப்புச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவரின் படத்தை வெளியிட்டுள்ள போலீஸ் திணைக்களம் அவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் கோரியுள்ளது. கிரி என அழைக்கப்படும் கிரிதரன் எனும் பெயரையுடைய இந்நபர் கொழும்பில் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாம்.

5 அடி 4 அங்குல உயரமுடைய இவர் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் நடமாடி வருவதாக தெரிவித்துள்ள போலீசார் இவர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น