วันพฤหัสบดีที่ 24 กันยายน พ.ศ. 2552

வடமேல் மாகாண ஆளுநர் சோமகுமாரி தென்னக்கோன் மரணமானார்

Photobucket
வடமேல் மாகாண ஆளுநர் சோமகுமாரி தென்னக்கோன் இன்று பிற்பகல் காலமானார்.

அம்பலாந்தோட்டையில் தென் மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டார்.

இறக்கும்போது, இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரெட்டித் தொகுதி பிரதான அமைப்பாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.

இவர் முன்னாள் அரசியல்வாதி முதியான்சே தென்னக்கோனின் சிரேஷ்ட புதல்வியாவார்.

"இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மரணமானார்" என அம்பாந்தோட்டை அரச வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஈ.எச்.எஸ்.ஜி. நாணயக்கார தெரிவித்தார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น