யாழ்.குடா நாட்டுக் கடற்தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க குருநகர் பாஷையூரில் ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
மேற்படி தொழிற்சாலையை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சந்திப்பொன்று இன்று (22) அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற சமயம் குடா நாட்டில் பிடிக்கப்படும் மீன்களைப் பதப்படுத்துவதன் மூலம் வெளிமாவட்டங்களுக்கு மீன்களைக் கொண்டு செல்லும் கடற்தொழிலாளர்கள் அதிக நன்மையடைவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இதேவேளை ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலையைக் குடா நாட்டில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மிகவிரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என இச்சந்திப்பில் கலந்து கொண்ட கடற்தொழிற்துறை அமைச்சின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.தர்மலிங்கத்திற்குப் பணிப்புரை வழங்கிய அமைச்சர் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น