
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இஸ்லாமாபாத் வந்துள்ள நிலையி்ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 80 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப் பகுதியான தெற்கு வசிர்ஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க போர் விமானங்களும் தாக்கி வருகின்றனர்.
இதையடுத்து தலிபான்கள் பெஷாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பிற பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர். இன்று நடந்த தாக்குதலும் தற்கொலைத் தாக்குதலாகவே கருதப்படுகிறது.
பெஷாவர் நகரில் ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று காலை இந்த கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 80 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல கடைகளும் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கிக் கிடக்கின்றனர். ஒரே மாதத்தில் பெஷாவரில் நடந்துள்ள 3வது வெடிகுண்டு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น