
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இவரது முறைப்பாடு குறித்து ஜனாதிபதி செயலகம் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளில் சிங்களவர்கள் தாம் ஏற்கனவே வசித்ததாகக் கூறி, அபகரிக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர் அன்டன் பெரேரா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிகளிடம் இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிக்கு தெரிவித்த முறைப்பாட்டின் பிரதியையும் மேற்படி அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น