วันพฤหัสบดีที่ 1 ตุลาคม พ.ศ. 2552

யாழ்தேவி பாதையை மீளமைக்க விடுக்கும் அழைப்புக்கான ஊடக பிரசாரம் நேற்று கொழும்பில் ஆரம்பம்
'உத்துரு மித்துரு தெற்கின் தோழன் இதயத்திற்கோர் டிக்கெட்' யாழ்தேவியின் பாதையை மீளமைத்திட விடுக்கும் அழைப்புக்கான ஊடக பிரசார விளம்பரத்தின் அங்குரார்ப்பண வைபவம் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில், வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கும் தாண்டிக்குளம் முதல் காங்கேசந்துறை வரையிலான 154.89 கிலோ மீற்றர் ரயில் பாதையை மீள நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதற்கென இலங்கை மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கவென, அவர்களுக்குப் போதிய விளக்கத்தினை அளிப்பதே இவ் ஊடக விளம்பரத்தின் பிரதான நோக்கமென இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்நிகழ்வில் ஓமந்தை தொடக்கம் காங்கேந்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் திட்டத்தைப் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனங்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும உத்தியோக பூர்வமாக அது தொடர்பான பணிகளைக் கையளித்தார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น