
மாநகர சபையின் முதலாவது மாதாந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்பு அதிதியாக யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆகியோரும் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்படவுள்ளதுடன் வரவேற்புரை ஆசியுரை என்பனவும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோரின் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น