วันเสาร์ที่ 31 ตุลาคม พ.ศ. 2552

தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து மீண்டும் விசாரணை


விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக கொழும்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

.அரசாங்கத்திற்கு எதிரான வகையில் குறித்த இருவரும் செயற்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น