
பங்களாதேஷின் தெற்கு பகுதியில் உள்ள போலா தீவுக்கு ஒரு படகு சுமார் 1000 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை நஷீர்புர் அருகே வந்தபோது அந்த படகு திடீரென மூழ்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிசாரும், ஆற்றோர கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
இதுவரை சுமார் 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்களை காணவில்லை. அவர்களைப் பற்றிய தகவல்கள் இதுவரை தெரிய வரவில்லை எனக் கூறப்படுகிறது
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น