
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் 'நான் அப்துல் கலாம்' என்ற பெயரில் தயாராகும் வெள்ளித் திரையில் தோன்றுகிறார்.
"இளைஞர்களே கனவு காணுங்கள்" என்று அடிக்கடி கூறும் அவரது பேச்சை ஒரு நிகழ்ச்சியில், இளம் சிறுவன் ஒருவன் கேட்கிறான். அவனது கனவை விவரிக்கும் சினிமாவாக இது தயாராக உள்ளது.
இந்தத் தகவலை குல்ஷன் குரோவர் என்பவர் தெரிவித்தார்.
"இந்தச் சினிமா பற்றி அவருக்கு நன்கு தெரியும். தெரிந்த பின்னரே அவர் வெள்ளித்திரையில் தோன்ற தனது சம்மதத்தை தெரிவித்தார்"என்றும் அவர் கூறினார். அவரும் இந்த சினிமாவில் அப்துல் கலாமுடன் நடிக்கிறார்.
ஐ.நா. சபையின் ஓர் அங்கமான 'யுனிசெப்' நிறுவனத்தின் பங்களிப்புடன், இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் இந்த சினிமா உருவாகிறது. மாதவ் பாண்டா என்ற டைரக்டர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น