
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு புளொட் எனப்படும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்..
அரசியல் அனுபவத்தை கொண்டு தம்மால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி, பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக வெளியிட்ட கருத்தை அடுத்தே சித்தார்த்தன் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரால் மாத்திரமே 13 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น