วันจันทร์ที่ 28 ธันวาคม พ.ศ. 2552

யாழ். 51 வது படையணியின் ஏற்பாட்டில் துரையப்பா விளையாட்டரங்கில் நத்தார் கரோல் கீத ஆராதனை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியின் வழிநடாத்துதலில் 51 வது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான நத்தார் கரோல்கீத ஆராதனை இன்று இரவு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

யாழ். ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை நல்லை ஆதீன முதல்வர் சிறிலசிறி சோதசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ். படைகளின் கட்டளைத்தளபதி மார்க் யாழ். மேல். நீதிமன்ற நீதிபதி விக்னராஜா யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். அரசாங்க அதிபர் கே.கணேஷ் உள்ளிட்ட பிரமுகர்களுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் படையினரும் இந்நிகழ்வினை கண்டு களித்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகள் தேவாலயங்கள் கழகங்கள் என்பவற்றுடன் ராணுவத்தினரின் பாண்ட் வாத்திய குழுவும் இணைந்து கரோல் கீதம் இசைத்தமை பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


























ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น