วันอังคารที่ 29 ธันวาคม พ.ศ. 2552

பொன்சேகா ஆட்சிப் பொறுப்பை ஏற்று 6 நிமிடங்களில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படும்: ரிசாட் பதியூதீன்

s1600-h/Risath%2520paatheen.jpg">
எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஆறு நிமிடங்களுக்குள் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படும் என அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மஹாவெலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் நான்கு வருட ஆட்சிக் காலத்தில் அவர் முஸ்லிம் மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சொல்வதைச் செய்யும் ஓர் அரசியல் தலைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น