วันอังคารที่ 29 ธันวาคม พ.ศ. 2552

காரைநகரில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கசூரினா கடற்கரையில் இசை நிகழ்ச்சி

யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தூக்கம் அளிக்கும் வகையில் காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கசூரினா கடற்கரையில் இசை நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடாத்தப்பட்ட மேற்படி இசை நிகழ்ச்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலக்மி ரொமேஷ் யாழ். பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் உட்பட பெருமளவு பிரதேச மக்களும் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.












ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น