
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை, ஆயுதக் கொள்வனவு தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுத்திருந்தார்.
இதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களில் ஒருவருமான அநுரகுமார திஸ்ஸநாயக்க பதிலளித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், முதன் முதலாக விவாதத்திற்கு வருமாறு தமது கட்சித் தலைவரான சோமவன்ச அமரசிங்கவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அரசாங்கம் அதற்குப் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.
எந்தவிதமான விவாதத்திற்கும் முகங்கொடுக்கத் தாம் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น