
அரசின் மீது சர்வதேச நாடுகள் யுத்தக்குற்ற விசாரணைகள் நடத்துவதற்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் ஜெனரல் சரத்பொன்சேகா சர்வதேசத்துக்கு பெற்றுக் கொடுத்து விட்டார் என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று முன்தினம் குற்றம் சாட்டியுள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயயின் செயலாளர் ரிசாந்த வர்ணகுலசூரிய இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் 13ம் திகதி இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்ட நாளாகும். அந்நாள் தான் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா எமது படையினரையும் யுத்தவெற்றியையும் காட்டிக் கொடுத்தார் யுத்தக்களத்தில் படையினரின் சரணடைய வந்த புலித்தலைவர்களை சுட்டுக்கொல்ல பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என்று பொன்சேகா 13ம் திகதி சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். இதன்மூலம் வரலாற்றில் இலங்கைக்கு எதிராக என்றுமில்லாதவாறு பாரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது இது பெரும் காட்டிக்கொடுப்பு இக்கூற்று புலி ஆதரவாளர்களுக்கும் சர்வதேசத்திற்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இலங்கை அரசு மீது யுத்தக்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த சர்வதேசத்துக்கு பொன்சேகா அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொடுத்து விட்டார் பெரும் யுத்தவீரரான பொன்சேகா இப்போது பெரும் தேசத்துரோகியாக மாறியுள்ளார். இந்த சரத் பொன்சேகாவால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகி விட்டது. ஜனவரி மாதம் 26ம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் அரசியல் நடத்தவே முடியாமல் போய்விடும் என்றார்
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น