วันพุธที่ 27 มกราคม พ.ศ. 2553

ஹெய்ட்டியில் இடிபாடுகளிலிருந்து 14 நாட்களுக்குப் பின்னர் ஒருவர் உயிரோடு மீட்பு


ஹெய்ட்டியை உலுக்கிய பூகம்ப இடிபாடுகளிலிருந்து 14 நாட்களின் பின்னர் 35 வயதுடைய நபர் ஒருவர் நேற்று மாலைஉயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இவரை மீட்டெடுத்த அமெரிக்கப் படையினர் அந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகவில்லை எனினும் உள்ளுறுப்புகள் சிதைவடைந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட நபர் உடனடியாக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பூகம்ப அதிர்ச்சியிலும் இந்த அபூர்வ சம்பவத்தினால் குடும்பத்தினர் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹெய்ட்டி பூகம்பத்தில் சுமார் 2 இலட்சம் பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น