วันพฤหัสบดีที่ 28 มกราคม พ.ศ. 2553

ரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரையும் நாட்டைவிட்டு வெளியேற அனுமதியளிக்க வேண்டாம் : பாதுகாப்பு தரப்பு


சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்படக் கூடாது என பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து இவ்வாறு சதித் திட்டங்களை சில முன்னாள் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட நபர்கள் தொடர்பிலான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น