วันเสาร์ที่ 2 มกราคม พ.ศ. 2553

இறுதியுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களும் பல பொதுமக்களும் கொல்லப்பட்டனர்: எஸ் பி திஸாநாயக்க


இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது பொதுமக்கள் உட்பட்ட சரணடைய வந்த பலர் கொல்லப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி பொதுவேட்பாளருமான சரத் பொன்சேகா, படையினரை காட்டிக்கொடுத்து விட்டதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் சுமார் 200 தமிழீழ விடுதலைப்புலிகள் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கிப்பிரயோகத்தை ஆரம்பித்ததும் படையினரும் திருப்பி தாக்கினர். இதன்போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 17 படைவீரர்களும் இந்த சம்பவத்;தில் கொல்லப்பட்டனர் என எஸ் பி திஸாநாயக்க தெரிவித்தார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น