วันพฤหัสบดีที่ 27 สิงหาคม พ.ศ. 2552

புத்தளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்


புத்தளம், மாம்புரியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரின் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்டவர் சிக்சன் கிசோர்குமார் என்ற 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்த வந்த அடையாளம் தெரியாதவர்கள் குடியிருப்புக்கு முன் இருந்து கிசோர்குமாரை அழைத்து, பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றி கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น