
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவதை, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக மிரட்டுகிறார்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முட்கம்பிவேலிக்குள் அடைபட்டு பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இது போன்ற கொடுமை உலகில் எந்த இனத்திற்கும் ஏற்பட்டதில்லை. இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதை தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று கூறி கைது செய்யவும், இயக்கத்தை தடைசெய்யவும் விளம்பரம் செய்கின்றனர். ஆதரவு இயக்கங்களை மிரட்டிப் பார்க்கின்றனர். தமிழ் இனத்திற்கு பெரும் துரோகம் செய்தவர்களை வரலாறு மன்னிக்காது என்றார்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น