วันพฤหัสบดีที่ 27 สิงหาคม พ.ศ. 2552

அரசாங்கம், இன்று பொலிஸாரின் உதவியுடன் சிங்கள இளைஞர்களையும் கொலை செய்து வருகின்றது -எதிர்க்கட்சித் தலைவர்!


அன்று தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கொல்லப்பட்ட போது அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என கூறிய அரசாங்கம், இன்று பொலிஸாரின் உதவியுடன் சிங்கள இளைஞர்களையும் கொலை செய்து வருகின்றது. இதுபற்றி ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் என்ன சொல்லப் போகின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். அநுராதபுரம் இளைஞர் சேவைகள்மன்ற கேட்போர் கூடத்தில் நேற்றுமாலை நடைபெற்ற சுதந்திரத்துக்கான அரங்கு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இன்று மக்களுக்கு சுதந்திரமாகக் கருத்துகளைக் கூட கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊடகஅடக்குமுறை முன்னர் ஒருபொழுதும் இல்லாதவகையில் அதிகரித்துள்ளது. அன்று ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் ஊடக அடக்குமுறை நடைபெறுவதாக குரலெழுப்பி வந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று அவர் ஜனாதிபதியானதும் இவ்வாறு நடந்து கொள்வது வேடிக்கையாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น