วันอังคารที่ 1 กันยายน พ.ศ. 2552

ஜனாதிபதிக்கு லிபியாவில் அமோக வரவேற்பு.


லிபியாவின் 40 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு திரிப்போலியில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. லிபியாவின் 40 வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக .லிபிய தலைவர் கேர்னல் கடாபியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். திரிப்போலி மாட்டிக்கா விமான நிலையத்தில் லிபிய திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீட் மற்றும் லிபியாவிற்கான இலங்கைத்தூதுவர் அன்சார் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். பல்வேறு நாடுகளின் தலைவர்களும் லிபியாவின் 40 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னர் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น