วันอังคารที่ 1 กันยายน พ.ศ. 2552

தமிழ்ச்செல்வனின் உதவியாளரான பெண்புலி உறுப்பினர் கைது


புலிகளின் முன்னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் உதவியாளரான பெண் புலி உறுப்பினர் கொழும்பு வெள்ளவத்தையில் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்லுவதற்கு திட்டமிட்ட நிலையில் வெள்ளவத்தையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே அப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பெண்ணின் கணவரும் புலி முக்கியஸ்தர் என்பதுடன் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின்போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமான புலி முக்கியஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே தமிழ்ச்செல்வனின் உதவியாளரான மேற்படி பெண் புலி உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น