วันพุธที่ 23 กันยายน พ.ศ. 2552

ஆம்பளை நீ அழலாமா? சீமான் பாட்டு


ஈழத்துக்காக குரல் கொடுக்கும் சீமானல்ல இந்த சீமான். இது சீமான் டுடோ‌ரியல் கல்லூ‌ரியை நடத்தும் அதன் உ‌ரிமையாளர் சீமான்.

இந்த கல்வியாளர் சீமான் திமுக அனுதாபி. அதனாலேயே கலையார்வம் இயல்பாகவே கொஞ்சம் தூக்கல். கல்வியில் சம்பாதித்ததை கலையில் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறார். முதல் முயற்சியிலேயே டி.ஆருக்கு போட்டியாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயா‌ரிப்பு என அனைத்து ஏ‌ரியாக்களையும் ஒற்றை ஆளாக கவனிக்கிறார்.

படத்துக்கு சீமான் வைத்திருக்கும் பெயர், எதையும் தாண்டுவேன். படப்பிடிப்புக்கு கிளம்பும்முன் நான்கு பாடல்களின் கம்போஸிங்கை முடித்திருக்கிறார். சாம்பிளுக்கு ஒரு பாடல்.

அழலாமா ஆம்பளை நீ அழலாமா?
ஆடு மாடு செதத்hலும் வீடு மனை போனாலும்
வீதியிலே நின்றாலும் வேலையே தொலைந்தாலும்
தண்டவாள இரும்புபோல உறுதியா இருந்துவிடு
சில்லறை விஷயங்களை தூக்கி எறிந்துவிடு…

பாடல் முழுக்க இப்படி நம்பிக்கை வ‌ரிகளாக தூவியிருக்கிறார் சீமான். பாடல் நன்றாகதான் இருக்கிறது. அ‌ரியர்ஸ் வைக்காமல் எல்லா துறையிலும் பாஸானால் ச‌ரிதான்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น