பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் பொறுமை எல்லை மீறியிருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘என் கணவரோடு நயன் தாராவைப் பார்த்தால் அடிப்பேன் என்று சொல்லியிருப்பது அதன் விளைவாகத்தான்!
"ஒரு முறை நானே நயன்தாராவுக்கு போன் செய்து என் கணவருடன் சுற்றுவதை நிறுத்து என்று கூறினேன். அப்படி எச்சரித்தும் அவர் என் கணவரை வளைத்துக் கைக்குள் போட்டுக் கொள்வதை விடவில்லை. இனிமேல் என் கணவருடன் எங்காவது நயன்தாராவை சேர்ந்து பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன்". இதுதான் ரமலத்தின் கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள்.
"சிலம்பரசனை ஏமாற்றியது போல என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா ஏமாற்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அவருடைய மனசு பூ போன்றது. இது போன்ற ஏமாற்றங்களை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. உடைந்து போய்விடுவார். அதனால் நயன்தாராவின் மாய வலையில் இருந்து அவர் விடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் ரமலத்.
இந்தப் பேட்டியின் மூலம் தெரிய வருகிற இன்னொரு செய்தி, பிரபுதேவாவின் அப்பா, அம்மா இருவரும் ரமலத்துக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்பது.
*

ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น