วันเสาร์ที่ 31 ตุลาคม พ.ศ. 2552

இலங்கைச் சட்டவிரோத குடியேற்றக்காரர்களினால் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது!


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களினால் கிறிஸ்மஸ்தீவில் பதற்றநிலை உருவாகியுள்ளதென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கிறிஸ்மஸ்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு நாடு கடத்தப்படக்கூடும் என அச்சம் நிலவும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாடு கடத்தப்படவுள்ள ஆறுபேர் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் இதனால் கிறிஸ்மஸ்தீவுகளில் பதற்றநிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த மனோதத்துவ வைத்தியர்கள் பொலிஸார் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น