วันพุธที่ 25 พฤศจิกายน พ.ศ. 2552

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்று அறிவிப்போம்:மனோ கணேசன்


ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு குறித்தும் யாரை ஆதரிப்பது என்பது பற்றியும் இன்று வியாழக்கிழமை அறிவிப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் குறித்த பல்வேறு சர்ச்சைகள் தற்போது எழுந்தவண்ணமுள்ளன. இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய அரசியல் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைமையத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் இதுவென்றும் மத்திய அரசியல் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக கலந்துரையாடப்பட்டு முடிவினை அறிவிக்கவுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น