jkr

அறிவியல் அறிவோம்

Posted: 05 Apr 2010 01:13 AM PDT

அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும் அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, ஆர்வம் என்பதன் ஆங்கிலச் சொல்லான Curiocity (Curiosity) என்ற பெயரில் ஓர் இணையதளம் இயங்குகிறது. ஆர்வத்திற்கு தூபம் போட்டு வளர்க்கும் ஒரு நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகின் இயக்க நிலைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஏதேனும் ஒன்று எப்படி இயங்குகிறது என்ற வினா மனதில் உள்ளதா/ இந்த தளம் செல்லுங்கள். அண்டு க்ண் என்ற பிரிவில் சென்று உங்கள் கேள்வியை டைப் செய்திடுங்கள். தொடர்ந்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பள்ளியில் உங்கள் வகுப்புநிலை,வசிக்கும் நகரம் என தகவல்களையும் கொடுங்கள். உங்களுக்கான பதில் அனுப்பப்படும். கேள்வி கேட்பது மட்டுமின்றி, ஏற்கனவே கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் அதில் பிரவுஸ் செய்து பார்க்கலாம்.

இந்த தளத்தில் எனக்குப் பிடித்தது பரிசோதனைச் சாலை (The Lab) பிரிவுதான். ஏதேனும் பரிசோதனை ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழிமுறைகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றைத் தந்து எப்படி பரிசோதனையை மேற்கொள்வது என்ற வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

நாம் அன்றாடம் சந்திக்கும் பொருட்கள் குறித்த அறிவியல் தகவல்களைத் தருகிறது Everyday Science என்ற பிரிவு. நான் இதனைப் பார்க்கும் போது முப்பரிமாணப் படம் குறித்த தகவல்கள் விரிவாகத் தரப்பட்டிருந்தன. இன்றைய திரைப்படங்கள் மட்டுமின்றி, டிவிக்களும் முப்பரிமாணக் காட்சிக்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இது அனைவரும் அறிய வேண்டிய விஷயமாகும்.
இந்த தளத்தில் நீங்கள் எங்கு பிரவுஸ் செய்தாலும், அறிவியல் குறித்து எதனையாவது கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி.

இந்த தளம் கிடைக்கும் முகவரி http://www.curiocity.ca/
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அறிவியல் அறிவோம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates