நெடுங்கேணியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் இராசலிங்கம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றபட்ட நெடுங்கேணி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் மனைவியின் கையை வாளால் வெட்டியும் கணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கடும் தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த நகைகளையும் கொள்ளையிட்டு சென்றிருந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கணவரே சிகிச்சை பலன்றி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கை வெட்டுப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
0 Response to "நெடுங்கேணியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு"
แสดงความคิดเห็น