இன்று உலக அகதிகள் தினம்
இன்று உலக அகதிகள் தினமாகும்.
உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்துள்ள 40 கோடி மக்களுக்கான அங்கீகாரத்தின் பொருட்டு இவ்வாண்டுக்கான தொனிப்பொருளாக 'வீடு'அடையாளம் காணப்பட்டுள்ளது
இவர்களில் சுமார் 10 கோடிப்பேர் அகதிகளாகக்காணப்படுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி உலக அகதிகள் தினத்தை அங்கீகரிப்பதற்கான தீர்மானமொன்றை நிறைவேற்றியது.இதன் அடிப்படையில் 2001ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் திகதி உலக அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டிலுள்ள 117 அகதி முகாம்களில் 95,219 இலங்கைத்தமிழ் அகதிகள் காணப்படுகின்றனர்.சுமார் 700 குடும்பங்கள் அகதிகளாக கேரள மாநிலத்திலும் வாழ்கின்றனர்.
இலங்கையின் மெனிக்பாம்,செட்டிக்குளம் ஆகிய நலன்புரி முகாம்களில் 293,000 இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.இவர்களில் 233,000 மக்கள் வடபகுதியின் ஐந்து மாவட்டங்களிலும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "இன்று உலக அகதிகள் தினம்"
แสดงความคิดเห็น