jkr

வடக்கு முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர் : ஆய்வில் மதிப்பீடு


வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளனர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு மதிப்பீட்டின் புள்ளி விபரத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "வட பகுதி அகதி முகாம்களிலிருந்து பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும். மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன." இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திணைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வுகளின் இறுதி அறிக்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்குப் பதில் பிரதமர் பங்கேற்பு


அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கலந்து கொள்வார் என இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், "80 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச, தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஒரு சிறு குழுவுடன் இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர், பிரதமரின் செயலாளர் மற்றும் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் பிரதமருடன் நியூயோர்க் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது" என்று மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இளைஞர், யுவதிகளுக்கு வர்த்தக சித்திர வடிவமைப்புப் பயிற்சி : வ.மா. கிராம அபி. திணைக்களம் ஏற்பாடு






வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் வவுனியாவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் 18 லட்ச ரூபா செலவில் வர்த்தக சித்திரம் மற்றும் வடிவமைப்புத் துறையில் பயிற்சியளித்து வருகின்றது. அரச திணைக்களத்தினால் இலங்கையில் முதன்முறையாக இந்தப் பயிற்சி நெறி வவுனியாவிலேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படுகின்ற இந்தப் பயிற்சி நெறிக்கு 25 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கணினி அறிவு, வர்ணமிடல் முறைகள், அலங்காரப் பொருள் ஆக்கம், ஸ்கிரீன் பிரிண்டிங், றப்பர் சீல் தயாரித்தல், விளம்பரப் பலகைகள், பதாதைகள் செய்தல், பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் செய்தல், மெடல்கள், கேடயங்கள் செய்தல், என்கிறேவிங், எச்சிங், எம்போசிங், முலாமிடல், மக் பிரிண்ட், பொயிலிங் மற்றும் தச்சுவேலை, வெல்டிங், வயரிங், எம்புறோடிங், டிஜிட்டல் போன்ற விடயங்களில் அடிப்படை அறிவுக்கான பயிற்சி என்பன இதில் பாடங்களாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக இதன் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.ஜசோதரன் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சி நெறி ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் என்றும், வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் பெலிசியன் தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றியதாக விசேட முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறி ஆறுமாதங்களுக்கு முழுநேர வகுப்பாக நடத்தப்படும் என்றும், பயிற்சியின் முடிவில் மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட துறைசார்ந்த சுயதொழில் வாய்ப்புகளுக்கான திறமையையும், அறிவையும் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அதிகாரியான அ.அருற்வேள்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் கருத்துரை வழங்கினார். அவர், "இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் மூலம் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னெற முடியும் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார். இந்த வைபவத்தில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வீ.குமாரசிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எமது கடற்படை அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகம் தயாராகவுள்ளது - பாதுகாப்புச் செயலர்


பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் எமது எமது கடற்படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகம் தயாராகவுள்ளது என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கடைற்படையினரை பாராட்டும் வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: நாட்டை பாதுகாப்பதில் தம்மை அர்ப்பணித்த கடற்படைத் துருப்புகள் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர். பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் தாய்நாட்டின் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் 8 கப்பல்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச கடற்பரப்பில் அழித்துள்ளனர். அதன் மூலம் புலிகள் ஆயுதங்களை கொண்டுவருவது தடுக்கப்பட்டதால் புலிகள் கடைசிக் கட்ட யுத்தத்தில் ஆயுத பற்றாக்குறையை எதிர்நோக்கினர். தன்னிடமுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு கடலில் பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங் கைக் கடற்படை உலகின் மிகச் சிறந்த கடற்படைகளில் ஒன்றாக விளங்குகிறது. கடற்படை தனது விசேட படகு அணியைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகள் மற்றும் நடமாட்டங்களை அழித்துள்ளது. அதி உயர் கடல் வலிமையைக் கொண்டுள்ள ஆனால், பயங்கரவாத நடமாட்டங்களை தடுக்க முடியாத நாடுகளும் உள்ளன. இலங்கைக் கடற்படையின் அனுபவங்களை தம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு பல நாடுகள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்

கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். புகைப்படத்தை பாருங்கள். பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா...? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா...? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன். இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார். கொழும்பைச் சேர்ந்த நாங்கள் முதற்தடவையாக மட்டக்களப்புக்கு போயிருந்தோம். அந்தப் பயணத்தின் போது மிக மிக சக்தியும் அதன் மூலம் பிரசித்தியும் பெற்ற புன்னை சோலை அம்மன் கோயிலுக்கு போக விரும்பினோம். இந்த ஆலயத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. நாங்கள் போன போது ஆலயம் மூடப்பட்டிருந்தது. ஓரிருவர் மட்டும் வெளியே நின்று வணங்கிக் கொண்டிருந்தனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இரண்டு கதவுகள் உண்டு. ஒரு கதவு பௌர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும். மற்றைய கதவு வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். பௌர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படும் கதவின் பின்னே பெரிய அம்மன் சிலை ஒன்று உள்ளதாம். வருடத்திற்கு ஒருமுறை திறக்கும் கதவின் பின்னே மூன்று அம்மன் சிலைகள் உண்டாம். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அம்மன் உரு வந்து ஆடுவதுண்டாம். பிள்ளை வரம் இல்லாதவர்கள், திருமணம் கை கூடாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நேர்த்தி வைத்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். இவை எல்லாம் இங்குள்ள மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விடயங்கள். மூலஸ்தானக் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலயத்திற்கு வெளியே நின்று அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். அந்தச் சமயம் அமிர்தகழிக்கும் புன்னைச் சோலைக்கும் இடையில் ஒரு பெரிய வெற்று நிலப்பரப்பு காணப்பட்டது. வானம் முகில்கலின்றி மிக ரம்மியமாக காணப்பட்டது. அந்த காட்சி என் மனதை மிகவும் கவர்ந்ததால் உடனே என் கமராவைக் கொண்டு அந்த இயற்கை சூழலை கிளிக் செய்தேன். இப்படி நிறைய புகைப்படங்களை எடுத்தேன். கொழும்பு திரும்பியதும் அந்தப் படங்களை டெவலப் பண்ணி எடுத்து பார்த்த போது ஆச்சரியப்பட்டு போனோம். அதிசயத்தில் பரவசப்பட்டு போனேன். எடுத்த படங்களில் வானில் அம்மன் உருவம் ஒன்று தென்பட்டது. இது நிச்சயம் புன்னைச்சோலை அம்மன் தான் என்று எங்கள் உள்மனம் சொல்கிறது. அதுதான் உண்மையும் கூட. கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வீடியோ

எதிர்பார்க்கப்படுகின்றது. ... ஒரு சொல்லென்றாலும் பறவாயில்லை உங்கள் கருத்துக்களை அந்த வீடியோக்கு கீழ் எழுதுங்கள்.
வாசகர்களிடமிருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மூன்று குரங்குகள் -அன்று = இன்று !






மூன்று குரங்குகள் - அன்றுகெட்டதை பார்க்காதே !கெட்டதை பேசாதே !கெட்டதை கேக்காதே !இதை வேறு விதமாகவும் கூறி இருப்பார்கள்.(கெட்டதை - பதில் வேறு சொற்கள்) புகைப்படங்கள் தொகுப்பு இதோ !



ஆனால் இன்று காலத்தின் மாற்றத்தால் அல்லது ....?எப்படி இப்படி என்று தெரியவில்லை.இதோ உங்கள் மூன்று குரங்குகள் - இன்று பார்வைக்கு,

உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates