jkr

நான்தான் அடுத்த முதல்வர் - விஜய் வைத்த டிமாண்ட், மிரண்டு போன ராகுல்


சினிமாவில் பஞ்ச் டைலாக் பேசுவதும் படங்கள் ஊற்றிக் கொள்ளும்போது, அரசியல் பிரவேசம் நடத்தி அதைச் சரிக்கட்ட முயல்வதும் காலம் காலமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் நடத்தும் கோடம்பாக்கக் குசும்புதான். அந்த வகையில் அரசியலில் அச்சாரம் போட கால் பதித்திருக்கிறார், இளைய தளபதி விஜய்.``இந்தியாவின் இளைய தளபதி ராகுல்காந்தியை, தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் சந்தித்தது சந்தோஷம் தரும் விஷயம்தான். ஆனால், இந்த விஜய் விஷயம் உள்ளவரா, விஷமக்காரரா என்றுதான் தெரியவில்லை. ஏனென்றால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில், விஜய் அரசியல் பேசியதைவிட வியாபாரம் பேசியதுதான் வியப்பைத் தருகிறது'' என்று டெல்லி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.இவர்கள் சந்திப்பு எங்கேதான் நடந்தது என்றும், என்னதான் பேசினார்கள் என்றும் விசாரித்தோம். முதலில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்டோம். அவரோ, ``இந்தியாவை வழிநடத்தும் இடத்தில் உள்ள இளைய தலைவர் ராகுலைச் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சந்திப்பின் போது, பல விஷயங்களைப் பேசினோம், என்ன பேசினோம் என்பதை இப்போது வெளியிட முடியாது'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.நாமும் விடுவதாக இல்லை. டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, வியப்பும், சிரிப்பும்தான் அவர்களிடம் இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் நடித்த `அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' ஆகிய மூன்று படங்களும் சரியாகப் போகவில்லை. `போக்கிரி' படம் வரை ரஜினிக்கு அடுத்து வசூல் மன்னன் என்று பெயரெடுத்திருந்த விஜய் தரப்புக்கு இந்த மூன்று படங்களின் தோல்வி மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது என்னவோ உண்மைதான். இப்போது நடந்து வரும் `வேட்டைக்காரன்' பெரிய வெற்றி பெறும் பட்சத்தில்தான் அவரது அடுத்த படமான ஐம்பதாவது படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கத் தொடங்கியது விஜய் காதுகளில் விழாமல் இல்லை.இதைச் சமாளிக்கும் விதத்தில், ஏற்கெனவே ரஜினி கையாண்ட ஃபார்முலாவான `மக்கள் இயக்கம்' மற்றும் `அரசியல் அரங்கம்' என்று அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அதன்படி கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் நூறு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் மையம் திறப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த இளைய தளபதி, அகில இந்திய அளவில் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.இதற்காக, விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் காங்கிரஸ் தலைவர்களான வாசன், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்களைச் சந்தித்து ஆரம்பகட்ட ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் தன் மகனுக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்குப் பற்றியும், புதிதாக ஆரம்பித்துள்ள `மக்கள் இயக்கம்' பற்றியும் பிரமிப்பூட்டும் விதத்தில் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே, தமிழக காங்கிரஸுக்கு ஒரு நட்சத்திர முகம் இருந்தால் தேவலை என்று நினைத்த மேற்படி தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.ஆனால். அதற்குப் பிடி கொடுக்காத எஸ்.ஏ.சி. தானும் தனது மகனும், சோனியா காந்தி அல்லது ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு, மேற்கண்ட தலைவர்கள் உடனடியாக செவிசாய்க்கவில்லை. என்றாலும், கடந்த வாரம் புதுவையில் `மக்கள் இயக்கம்' மற்றும் புதிய இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த விஜய்யை காங்கிரஸ் எம்.பி.யும் அமைச்சருமான நாராயணசாமி சந்தித்துப் பேசினார்.அவர் மூலமே ராகுல் காந்தியைச் சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைத்ததாம். அதன்படி கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடந்த சந்திப்பு பற்றி நம்மிடம் சிரிப்பு மாறாமல் சொன்னார், தமிழகத்தின் இளைய எம்.பி. ஒருவர்.``வழக்கமாக நெம்பர் 12, துக்ளக் லேண்ட் பங்களாவில்தான் தனது அரசியல் சந்திப்புகளை ராகுல் காந்தி வைத்துக் கொள்வார். கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பு என்றால், ஜன்பத் சாலையில் உள்ள தனது தாய் சோனியா காந்தி வீட்டில் வைத்துக் கொள்வது அவரது பழக்கம். ஆனால், விஜய்யின் செல்வாக்கு மற்றும் இமேஜிற்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ராகுலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான வட இந்திய அமைச்சர் ஒருவரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.பெரியளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் மிகவும் சாதாரணமாக அமைச்சரின் வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் அழைத்துச் செல்லப்பட்டார் விஜய். அவருக்காகக் காத்திருந்த ராகுல், விஜய்யுடன் கைகுலுக்கினார். காபி, காச்சோரி மற்றும் வடஇந்திய இனிப்புகளுடன் அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் விஜய் உண்மையிலேயே திக்குமுக்காடிப் போனார்.பின்னர், மெதுவாகத் தொடங்கியது, ராகுல்- விஜய் பேச்சு. ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றி ராகுல் விசாரித்தாராம். கடந்த முறை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்த தபால் தலை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்தார் ராகுல்.தமிழ்நாட்டின் ஷாருக்கான் என்று பெயரெடுத்துள்ள நீங்கள், காங்கிரஸ் பேரியக்கத்தில் இரண்டறக் கலக்க வேண்டும் என்று இயல்பாக ராகுல் சொல்லியிருக்கிறார். அதுவரை மௌனமாக இருந்த விஜய், தனது மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, தனது ட்ரேடு மார்க் வசனமான `சரிங்ண்ணா' என்று போட்டுப் பேசாமல் ஆங்கிலத்தில் பதிலளித்தார். தனக்குத் தமிழ்நாட்டில் தனிப்பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, தனக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, மிகப்பெரிய அந்தஸ்துடன் கூடிய பதவியைக் கொடுக்க வேண்டும் என்று எடுத்த எடுப்பில் நிபந்தனை விதித்திருக்கிறார். இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த ராகுல்ஜி சிரித்தபடியே, எதிரில் இருந்த லாப்டாப்பைத் தட்டியபடியே `காங்கிரஸ் பேரியக்கத்தில், நேரடியாக யாரும் தலைவராக வரமுடியாது; அடிப்படை உறுப்பினரான பிறகு, கட்சித் தேர்தல் மூலமே பதவிகளுக்கு வரமுடியும்' என்ற நிலைமையை எடுத்துச் சொன்னார்.அதை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாத விஜய், தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலானோர் தன்னை தமிழக முதல்வர் (!) பதவிக்குப் போட்டியிட நிர்ப்பந்திப்பதாகக் கூறி, அதற்கு காங்கிரஸ் உதவுமா என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.அதைக் கேட்டு சில வினாடிகள் மௌனமாக இருந்த ராகுல்ஜி, `இதை உரிய நேரத்தில் பரிசீலிக்கலாம். ஏற்கெனவே, கட்சி தொடங்கி தமிழகத்தில் முக்கிய இடத்திலிருக்கும் விஜயகாந்திடமும் இதுகுறித்துப் பேசியிருக்கிறோம்; அவருடன் இணைந்து செயல்பட முடியுமா என்பதை யோசித்துச் சொல்லுங்கள்' என்று விஜய்யிடம் சொன்னார். அதற்கு அதுவரை மௌனமாக இருந்த விஜய்யின் தந்தை, `எங்களது ரசிகர் மன்றங்களை அரசியல் கட்சியாக்கி தனியாகச் செயல்படலாம் என்றுதான் திட்டமிடுகிறோம். அப்படி ஆரம்பிக்கப்படும் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றிக் கூட யோசிக்கலாம். அதோடு, நாங்கள் கொஞ்சம் பொருளாதார ரீதியாக இழப்பைச் சந்தித்துள்ளோம். அதை சரிக்கட்டி சமாளிக்க காங்கிரஸ் உதவும் என்று நம்புகிறோம்' என்றார்.இதற்கும் ராகுல் சிரித்தபடியே, `பார்க்கலாம். இன்னும் நமக்குள் பல சந்திப்புகள் நடக்கும் என்று நம்புகிறேன். அப்போதும் நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். இப்போது நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம். அதுவே போதுமான அளவுக்கு சந்தோஷமாக உள்ளது' என்று மீண்டும் விஜய்யுடன் கைகுலுக்கி விடை கொடுத்தார். இருந்தும் மறுநாள் வரை டெல்லியிலேயே விஜய்யும், அவரது தந்தையும் இருந்தனர்'' என்று முடித்துக்கொண்டார் அந்தப் பிரமுகர்.முன்னதாக, விஜய் குறித்து ராகுலுக்குத் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ப்ரொஃபைலில், விஜய்யின் சில ஹிட் படங்களின் சிடிகள் இருந்ததாம். அத்துடன், ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்கிற புள்ளிவிவரங்களும் ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.திடீரென விஜய்க்கு அரசியல் ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்ற கேள்விக்கும் அந்த ப்ரொஃபைலில் பதில் இருந்ததாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேரு ஸ்டேடியத்தில் நடந்த `தசாவதாரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, முதல்வரை கலைஞர் என்று குறிப்பிடாமல், `கருணாநிதி' என்று சொல்லிவிட்டார். அதில், கடுப்பான தி.மு.க.வினர் சிலர், நேரடியாகவே விஜய்யை தொலைபேசியில் அழைத்து மிரட்டியிருக்கிறார்கள். இதனால், நொந்துபோன எஸ்.ஏ.சி. `என் மகனை அமைச்சரென்ன முதலமைச்சரே ஆக்கிக் காட்டுகிறேன்' என்று தன் நெருங்கிய வட்டாரத்தில் சபதம் செய்தாராம். இதையெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார், ராகுல்காந்தி. உளவுத்துறை மூலமாக விஜய்யின் ரசிகர்களில் எத்தனை பேர் வாக்குவங்கியாக இருக்கிறார்கள் என்பது குறித்தும் தகவல் சேகரித்து ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதற்கிடையே, விஜயகாந்தின் தே.மு.தி.க., அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறை ஆகியவற்றால் தி.மு.க.வில் இளைஞர் வரத்துக் குறைந்துவிட்டது. இதனாலேயே ராகுல், காங்கிரஸுக்குப் புது ரத்தம் பாய்ச்ச முடிவெடுத்து பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிகளை ஒழித்துக்கட்டிவிட்டு கட்சித் தேர்தலை நடத்தப் போகிறார். அதன் ஒருபகுதியாகத்தான் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் விஜய் உடன் சந்திப்பு நடத்தி முடித்திருக்கிறார் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.விஜய்யை இழுத்துப் போடும் திட்டம் தி.மு.க.வுக்கு ஏற்கெனவே இருந்தது. அதன்படியே தபால் தலை வெளியீட்டு விழாவுக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், ஸ்டாலின் மகன் உதயநிதி `குருவி' படத்தை விஜய்யை வைத்து தயாரித்தார். அழகிரி மகன் தயாநிதி நடத்திய ஒரு விழாவில் அழைப்பின் பேரில் விஜய்யும் கலந்துகொண்டார். இந்த நிலையில் விஜய் காங்கிரஸுடன் காட்டும் நெருக்கம் தி.மு.க. தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.``ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்''- இது விஜய்யின் பிரபலமான பஞ்ச் டைலாக்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வீட்டிற்கு ஒரு துளசி செடி வளர்ப்போம்


துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
பல வீடுகளில் இன்று அழகுக்காக பல தினுசு தினுசா செடி வளர்க்கின்றனர்.மிகச் சிலரே துளசி செடியினை வளர்க்கின்றனர், அதன் பயனையும் அனுபவித்து வருகின்றனர்.ஆனால், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முதன்மையான செடி, துளசி செடிதான்.துளசிச் செடியினை வளர்க்க பெரிய இடமோ , பராமப்பரிதற்கு நிறைய நேரங்களோ , அதிக செலவோ தேவையில்லை.
துளசி செடி வளரும் தன்மை:
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண் தேவை.
வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
துளசி செடியின் பயன் தரும் பாகங்கள்:
இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
துளசி செடியின் பயன்கள்:
தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும்.
இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.
மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
இன்று பலவகையான மருந்துகளில் துளசி சேர்க்கப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் அப்படின்னு இன்னும் எத்தனை எத்தனை காய்ச்சல் நம்மை வதைக்க வருகிறதோ தெரியவில்லை.தொடர்ந்து நாம துளசி உபயோகிசிகிடு வந்த...இந்த மாதிரி நோய்கள், காய்ச்சலில் இருந்து போராட உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
என்ன நண்பர்களே……. துளசி செடிய உங்க வீட்டுல வளர்க்கத் தயாராயிட்டிங்கலா
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஹர்பஜன் சிங்கிற்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதிப்பு


ஹர்பஜன் சிங் சமீபமாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரூ.1 கோடி பெறுமானமுள்ள 'ஹம்மர்' காரை எண் பலகை இல்லாமல் ஓட்டியதால் சண்டிகார் போக்குவரத்துக் காவல்துறை அவருக்கு ரூ.3000 அபராதம் விதித்தது.ஹரியானா போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் தூன் இது பற்றிக் கூறுகையில், இதனால் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.இந்த புதிய வகை ஆடம்பர காரை முதலில் வாங்கியவர் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி. அவர் வெள்ளிக் கலரை தேர்வு செய்தார். ஆனால் ஹர்பஜன் கறுப்பு கலர் காரை தேர்ந்தெடுத்தார்.அதே போல் ஹர்பஜன் சிங் நியூ பராதரியில் கட்டுமானத்தில் இருக்கும் தன் புதிய வீட்டுக்கு குடியேறவுள்ளார். 2001ஆம் ஆன்டு ஆஸ்ட்ரேலியா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது 33 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக மா நில அரசு அவருக்கு இந்த மனையை பரிசாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தான் சிறு வயது முதல் வளர்ந்து வந்த பழைய வீட்டை விற்கப்போவதில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடு தன் இறந்து போன தந்தை சர்தேவ் சிங்கின் நினைவாக உள்ளது என்றார் ஹர்பஜன் சிங்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மாடல் அழகிகளை கற்பழித்த வழக்கு : அமெரிக்க இந்தியருக்கு 59 வருட சிறை


லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் ஃபேஷன் டிசைனராக இருக்கும் அமெரிக்க இந்தியரான ஆனந்த் ஜானுக்கு, மாடல் அழகிகளை கற்பழித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக 59 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 35 வயதான ஆனந்த் ஜானுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. அமெரிக்காவின் பிரபல மாடல்களான பாரிஸ் ஹில்டன், மேரி பிளிஜ் போன்றவர்கள், இவர் டிசைன் செய்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு புகழ் பெற்ற டிசைனராக இருக்கும் ஆனந்த் ஜான், 2002 இலிருந்து 2007 வரை உள்ள காலத்தில், 14 முதல் 21 வயது வரையுள்ள இளம் மாடல் அழகிகளை கற்பழித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தது. நேற்று திங்கட்கிழமை அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஆனந்த் ஜான் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. இந்த வழக்கில் இவருக்கு எதிராக ஒன்பது இளம் பெண்கள் சாட்சியம் அளித்திருந்தனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தியாவை குறிவைத்து ஏவுகணை?


அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய, "ஹார்பூன்' ஏவுகணையின் வடிவமைப்பை சட்ட விரோதமாக மாற்றி அமைக்கவில்லை' என, பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை, இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக வந்த தகவலையும் மறுத்திருக்கிறது. அமெரிக்காவில் தயாரான, "ஹார்பூன்' வகை ஏவுகணைகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள், கப்பல்களை தாக்குவதற்காக கடற்படை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை.
ஆனால், பாகிஸ்தான், இந்த ஏவுகணையின் வடிவமைப்பை தரையிலிருந்து, தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றம் செய்துள்ளதாகவும், இவை இந்தியாவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தாவும் இந்த விஷயத்தில் தனது கவலையை தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி கூறுகையில், "அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தவறான உளவுத் தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து உள்நாட்டில் போரிட்டு வரும் சூழ்நிலையில், இதுபோன்ற தவறான தகவல் வெளியிடப்படுவது, அமெரிக்காவுடனான உறவை பாதிக்கும்' என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வகுப்புக்குள் அனுமதிக்க மறுத்த தலைமை ஆசிரியர்-2 மாணவிகள் தற்கொலை

திருவண்ணாமலை: தலைமை ஆசிரியர் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டதை அடுத்து மனமுடைந்த மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் இருவர் பலியாகினர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் உள்ள மேல்செங்கம் புதூர் காட்டுகொட்டாய் கிரமாத்தில் வசித்து வருபவர் வேலு. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் வேண்டாமணி (14) மேல்செங்கம் அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் ஜெயலட்சுமி (11) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (12) 7ம் வகுப்பு படித்து வந்தார்.இவர்கள் மூவரும் பள்ளிக்கு ஒன்றாகவே சென்று வந்தனர். மேலும், இவர்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல எந்த பேருந்து வசதியும் கிடையாது என்பதால் மாணவிகள் நடந்தே சென்றுள்ளனர்.நேற்று அவர்கள் சற்று தாமதமாக பள்ளிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி அவர்களை பள்ளிக்கு நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டார். நாளை பள்ளி வரும் போது கண்டிப்பாக பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியுள்ளார். வீட்டுக்கு போனால் பெற்றோர்கள் திட்டுவார்களே என பயந்த அந்த மூன்று மாணவிகளும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்தனர்.பின்னர் நீருக்குள் இருந்தபடியே கூச்சலிட்டனர். அவர்களில் வேண்டாமணி மட்டும் கிணற்றில் தண்ணீர் இறைக்க பயன்படும் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை பிடித்து கொண்டு நீருக்குள் மூழ்காமல் தப்பித்தார். மற்ற இரண்டு மாணவிகளும் பரிதாபமாக இறந்து போனார்கள்.போலீசார் இறந்த இரண்டு மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவிகளுடன் கண்டிப்பாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் பழனிச்சாமியிடம் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுருகன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
Tags:
scholl girl, commit suicide, thiruvannamalai, hm, suspend, well, பள்ளி மாணவிகள், தற்கொலை, திருவண்ணாமலை, தலைமை ஆசிரியர், சஸ்பென்ட், கிணறு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நவீன உலகம் மலட்டுத் தன்மையே தரப்போகிறது.



நவீன நாகரீக வாழ்க்கை.. அனைத்திலும் பரபரப்பு. நேரம் போதாமை.. பணமே முக்கியம், உயர்தர வாழ்க்கை கலாச்சாரம்,
பீசா, பெர்கர் இல்லாத உணவு ஓர் உணவா ?
தூக்கம் தொலைந்து போன வாழ்க்கை...
மேற் தட்டில் உள்ள இளைஞனுக்கு, இளைஞிக்கு கனவுகள் அதிகம். ஆனால் நிஜவாழ்க்கை அதை தருவதில்லை.
மனக்கசப்பு... பாலியல் பிரச்சனைகள்... கனவு வாழ்க்கை நிஜவாழ்வில் பொருந்தாதுப் போதல். டேட்டிங் வாழ்க்கை கானல் நீராகப் போதல் போன்றவை இளைய சமூதாயத்தை மிகவும் பாதிக்கவே செய்கிறது.
திருமண வாழ்க்கையில் ஒவ்வொறு 10 பேருக்கும் ஒருவர் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு தம்மிடம் வருவதாக பாலியல் டாக்டர் நாராயண ரெட்டி கூறுகிறார்.
இருக்கமான ஜீன்ஸ், புகைப்பழக்கம், குடி, மற்ற போதைப்பழக்கம் , மன அழுத்தம் இளைய தலைமுறையினருக்கு மலட்டுத்தன்மையையே பரிசாக கொடுக்கிறது.
சாட்டிங்கில் தொடங்கி
இணையம் இரத்தத்தில் உள்ள அணுக்களோடு கலந்து விட்டு இருக்கிறது. சாட்டிங்கில் தொடங்கி, மின் அஞ்சல், இணையத்தில் மேய்வது கொஞ்சம் உள்ள காலத்தையும் தின்று விடுகிறது. தூக்கம் இணையத்தால் திருடப்படுகிறது.
இளைஞிகளுக்கு உருவாகும் கரு முட்டை, இளைஞர்களுக்கு உருவாகும் விந்தணுக்கள் உருவாகும் வித்தத்தை இப்புற காரணிகள் பெறும் பாதிப்பை கொடுக்கிறது.
ஐபாட் டிஜிட்டல் இசை
செல்போன் இல்லாத இளைஞனை காணமுடியாது. ஐ பாட், எம்பி3. எம்பி4 என்று பிளேயர்களின் வகைகள் நீண்டு கொண்டே செல்கிறது. மூக்குப் பொடி சைசில் ஏஆர் ஆர் , பிரிட்டனி ஸ்பியர்ஸ், வேங்கா பாய்ய்ஸ், ராப் இசை மூளையில் உள்ள நியுராண்களை தட்டிக் கொண்டே இருக்கிறது. மன்னிக்கவும் அறைந்து கொண்டே இருக்கிறது. அதுவும் ஆப்பிள் கம்பெனியின் ஐபாட் டிஜிட்டல் இசையின் டெசிபல் அளவு அதிகம் என்று சொல்கிறார்கள். இளைய இரத்தத்தை கொதிநிலையிலேயே வைக்கிறது. நாடித் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதுவும் ஒரு காரணியாக கூறுகிறார்கள்.
டைட் ஜீன்ஸ்
வெப்ப மற்றும் குளிர் பிரதேசங்களில் நம் மக்கள் நவீன வாழ்க்கை கனவுகளோடு செல்கிறார்கள். இங்கு வாழ் சூழலே முக்கியம். ஜீன்ஸ் போடாத இளைஞன் அறை மனிதன் என்றாகிவிட்ட்து. தொடையை இருக்கும் ஜீன்ஸ், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை தடுப்பதாக பாலியல் டாக்டர் ரெட்டி கூறுகிறார். சென்னை இளைஞிகளும் டைட் ஜீன்சில் வருவதை கௌரமாகவே கருதும் நிலை அவர்களையும் விட்டு வைக்க வில்லை.
சூடான குளியல்.
பிறகு புத்துணர்ச்சித் தரும் சூடான ஆவி பறக்கும் குளியல். ”பச்சைத்தண்ணீ”யில் குளிக்கும் வாழ்க்கை நகைப்புக்குள்ளாக்கிவிட்டது. ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை குறைப்பதாக சென்னை டாக்டர் காமராஞ் கூறுகிறார். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மருந்து மர்றும் பூச்சிக் கொல்லி கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவு காய்கறி ,பழங்கள் மலட்டுத்தன்மைக்கு பொதுவான காரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.
முடமாகிப்போன வேலை அமைப்பு
கணினி சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் உட்கார்ந்த நிலையிலேயே ( Sedentary) அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள்.
டேபிலெயே கிடைக்கும் பீசா, பர்கர் துரித உணவு.. என வாழ்கை முடங்கிப்போய்விட்டது. சென்னை இளைஞர்கள் 50 விழுக்காடுக்கு குறைவில்லாமல் இப்பிரச்சனையில் ஆட்பட்டுள்ளார்கள்.
அனைத்தும் கிடைக்கிறது..
உட்கார்ந்த நிலையில் அரட்டை அடிக்க..
சுவைக்கு பீசா, நூடுல்ஸ்..
காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் டிஜிட்டல் இசை...
உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ்...
எல்லாம் கிடைக்கும் எங்கள் இளைஞனுக்கு...
ஆனால் நாளைய சந்ததி உருவாக்கும் திறனை மட்டும் தரப்போவதில்லை இந்த நவீன உலகம்...
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates