jkr

ஒரு மாதத்தில் 26 பேர் கைது என மன்னாரில் முறைப்பாடு


மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் கடந்த ஆகஸ்ட் முதலாந் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக மன்னார் சுகவாழ்வு மன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த 26 பேரில் குடும்பஸ்தர்களும் இளைஞர்களும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்களுடைய வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இவர்களை கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரே கைது செய்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னார் சுகவாழ்வு மன்றத்திடம் முறையிட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குடும்பஸ்தர் ஒருவரைக் காணவில்லை


மன்னார் சாந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி மன்னார் சுகவாழ்வு மன்றத்தில் முறையிட்டுள்ளார்.மாகாலிங்கம் ஜானார்த்தனன் (வயது 33) என்பவர் கடந்த 23ஆம் திகதி மன்னாரில் இருந்து பேசாலைக்கு மேசன் வேலைக்காகச் சென்றுள்ளார். பின் அன்று மாலை 4.30 மணிக்கு பேசாலையில் இருந்து தனது மனைவியுடன் தொலைபெசியில் பேசிய போது தான் மன்னாருக்கு வருவதாகக் கூறியுள்ளார். எனினும் இவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரின் உறவினர், நண்பர் வீடுகளிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் இவர் எங்கும் வரவில்லை என்ற தகவலையடுத்து, இவரது மனைவி நேற்று மன்னார் சுகவாழ்வு மன்றத்தில் முறைபாடு செய்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தின் 70 ஆண்டுகள்




இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தின் 70 ஆண்டுகள்
பர்மாவில் போரிட்ட ஒரு சீக்கிய சிப்பாய்இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதாக கருதப்படும் தினத்தின் 70 ஆண்டுகளை குறிக்கும் வகையில், போலந்தில் வைபவங்கள் நடக்கின்றன. உலகமெங்கும் பரந்துபட்டு நடந்த அந்தப் போர் உலகிலேயே மனித குலம் இதுவரை சந்தித்த மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகியது.
அது ஒரு முழுப் போர்- ஒட்டுமொத்தமாக, முன்னெப்போதும் இல்லாதபடி , அனைத்து உலகத்தையும் அது ஆக்கிரமித்தது. அதில் பங்கேற்ற முக்கியமான தரப்பினர், தமது தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான முயற்சிகள் அனைத்தையும் மோதலுக்காக அர்ப்பணித்தனர்.
உலெகெங்கும் இருந்து பத்துக்கோடி படைச் சிப்பாய்கள் இந்தப் போரில் சண்டையிட்டனர். 5 முதல் 7 கோடிப்பேர் அதில் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப்ப் போர் காலகட்ட சோவியத் சுவர்ரொட்டி ஒன்றுஇறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். அதிலும் அதிகத் தொகையினர் இறந்தது சோவியத் ஒன்றியத்தில். தொற்று நோய்களும், பட்டினியும் பலரைப் பலிகொண்டுவிட்டன.
ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் போர் அறிவிப்பு, பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் அனைத்தையும் தவிர்க்க முடியாமல் போரில் இழுத்து விட்டது.
பெரும் எண்ணிக்கையிலான துருப்புக்காவிக் கப்பல்களும், ஆயுதக்கப்பல்களும் சமுத்திரங்களைக் கடந்து சண்டையிடச் சென்றதால், ஆஸ்ரேலியா, கனடா முதல் இந்தியா வரை அனைத்து நாடுகளில் இருந்தும் படையினர் சண்டையில் குதிக்கச் செய்யப்பட்டனர்.
உதாரணமாக பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் வட ஆப்பிரிக்காவிலும், இத்தாலியின் மீதான நேச நாடுகளின் படையெடுப்பிலும் சண்டையிட்டார்கள்.
போர் வீரர்களின் சமாதிகள்ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு பிராந்தியச் சண்டைகளே இந்த இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாக காரணம் என்கிறார் மிகப் பிரபலமான பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளரான, சேர் மைக்கல் ஹொவார்ட். அதில் ஒன்று சீனாவின் மீதான ஜப்பானிய விஸ்தரிப்பு. அடுத்தது 1939 ஆண்டு ஜேர்மனி, போலந்தை தாக்கிய நடவடிக்கை. அது ஐரோப்பாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான மோதல்களுக்கு மீண்டும் வழி செய்தது.
ஜேர்மனியின் சோவியத் ஒன்றியத்தின் மீதான தாக்குதலாலும், பேர்ள் காபரில் இருந்த அமெரிக்க கடற்படை மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்த ஐரோப்பிய அதிகார மையங்ககள் ஆகியவற்றின் மீதான ஜப்பானிய தாக்குதலாலும், 1941 இல் இந்த போர் உலக மட்டத்துக்கு விரிவாக்கப்பட்டது.
சோவியத்தில் ஏற்பட்ட அழிவுஇந்த போரின் விளைவாக ஐரோப்பிய பிளவுகள் மேலும் ஆழமாகியதுடன், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை வல்லரசுகளாகவும் உருவெடுத்தன.
ஆசியாவின் ஆட்சிகளிலும் இது பல மாற்றங்களுக்கு காரணமாகியது. அதுமாத்திரமல்ல, ஐரோப்பிய காலனித்துவ நாடுகளில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியையும், வறுமையையும், ஏற்படுத்தியதுடன், அவை காலனித்துவ ஆட்சியில் இருந்து மீளவும் வழி அது செய்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வறட்சியை சமாளித்துவிட முடியும் என்கிறார் மன்மோகன் சிங்


இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், உலக அளவிலான பொருளாதார மந்த நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வறட்சியையும் எளிதில் சமாளித்துவிட முடியும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் மத்திய திட்டக்குழுவின் கூட்டம் இன்று, மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசும்போது, இந்தியப் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வறட்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், முக்கியத் திட்டமான தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், மற்ற திட்டங்களுடன் இணைத்து அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய, குறிப்பாக, கட்டுமானத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க, தனியார் துறையுடன் இணைந்த கூட்டுத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உலக அளவிலான பொருளாதார தேக்க நிலை, வளரும் நாடுகளுக்குத் தேவையான வளங்களைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த 2008-2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2009-2010 இல் 6.7 சதவீதத்திலிருந்து 6.3 சதமாகக் குறையும் என்றும் திட்டக்குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வட இலங்கையின் தலைநகராக மாங்குளம்


இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இருப்பினும் மாங்குளத்தில் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தும் காணப்படுவதாகக் கூறினார்.
யாழ் மாவட்டத்துக்கு வெளியே வட மாகாணத்துக்கான தலைநகரை கொண்டு செல்வதற்கு அந்த மாவட்டத்தின் சனநெரிசல் போன்ற சில விடயங்களே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெஸ்லான் பணய சம்பவம் நினைவு தினம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஷிய நகரான பெஸ்லானில் ஒரு பள்ளியின் மீது நடைபெற்ற ஒரு முற்றுகையில் 350 பேர் பலியான சம்பவத்தை அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
அந்த சம்பவத்தில் பலியானவர்களில் பாதியளவினர் சிறார்கள். அந்தப் பள்ளியை முற்றுகையிட்டிருந்த செச்சன்ய நாட்டைச் சேர்ந்தவர்கள், செச்சன்யாவிலிருந்து ரஷியத் துருப்பினர் விலக வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர்.
மூன்று நாட்கள் இடம் பெற்ற இந்த முற்றுகை, சர்ச்சைக்குரிய வகையில் ரஷியர்கள் அந்தக் கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்ததையடுத்து முடிவுக்கு வந்தது.
இந்தச் சம்பவம் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் ஆனாலும் அதன் நினைவுகள் அங்குள்ள மக்களை இன்றளவும் பாதித்துள்ளதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து ஒரு தீவிரமாக ஒரு விசாரணை நடைபெறாதது குறித்து பலர் விமர்சனம் செய்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சுய சிந்தனையில்லாத விஜயகாந்த்.




சுய சிந்தனையில்லாத விஜயகாந்த்.அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் ஆட்களை நாம் பார்த்திருக்க கூடும்.அடுத்தவருடைய பெயர்களையும், பட்டங்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஒரு மகா மனிதர் இருக்கின்றார்.அவரு வேற யாருமில்லைங்க…..நம்ம புரட்சி கலைஞர், கருப்பு எம்.ஜி.யார் விஜயகாந்து தாங்க.இப்படி பெயர்களையும் பட்டங்ககளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இவர் அடைந்த பேரும் புகழும் மிக அதிகமே.எப்படி என்று பார்ப்போம்.அ. விஜயகாந்தாக மாறிய விஜயராஜ் அழகர்சாமி நாயுடு:விஜயராஜ் அவர்கள் சினிமா உலகில் நுழைய, பிரபலமாக ஆசை பட்டு தனது பெயரில் உள்ள “ராஜ்” இனை நீக்கி விட்டு …. அப்பொழுது மிக பிரபலமாக பேசப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் வர வேண்டும் என்று எண்ணி ரஜினியின் பெயரில் இருக்கும் காந்தை எடுத்து தனது பெயரோடு ஒட்டிக் கொண்டு விஜயராஜ்……விஜயகாந்தாக மாறினார்.பட வாய்ப்புகளும் வந்தது, அதன் மூலம் பேரும் புகழும் வந்தது.ஆ. புரட்சி கலைஞராக மாறிய விஜயகாந்த்:புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படும் இவர் என்ன புரட்சி செய்தார்.பசுமை புரட்சியா ?கல்வி புரட்சியா ?.அல்லதுமக்கள் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி மக்கள் புரட்சி செய்தாரா ?.ஒன்றுமே செய்ய வில்லை.நமது தமிழக முதல்வர் கருணாநிதியை விரும்புவர்களும் விரும்பாதவர்கள்கூட அவரைக் கலைஞர் என்று பெருமையாக அழைத்து புகழாரம் சூட்டுவர்.கலைஞரிடம் மதிப்பும் மரியாதையும் இருப்பதை போல் காட்டிக் கொண்டு ஆட்டுத் தோல் போர்த்தி கொண்ட ஒரு நரி போல் அவரிடம் நட்பாக இருந்து கொண்டு, கலைஞரிடம் அளவற்ற பாசத்துடன் இருப்பதைப் போல் நடித்து கொண்டு, சத்தமில்லாமல் புரட்சியையும் கலைஞரையும் ஏற்கனவே மாற்றிய பெயரோடு அடை மொழி போல் போட்டுக் கொண்டார்.இதன் மூலம் அவர் அடைந்த பேரும் புகழும் அதிகமே.இ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் :விஜயராஜ் விஜயகாந்தாக மாறி, விஜயகாந்துக்கு முன்பு புரட்சி கலைஞர் என்ற அடை மொழியும் போட்டுக் கொண்டு சில காலங்கள் சொல்லும் படியான படங்களில் நடித்து கொண்டு இருந்தார்.பின்னர் காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. நடித்த படங்கள் ஓடவில்லை, பார்க்க ஆளுமில்லை என்ற நிலை ஆனது. இந்த நிலையில் அவருக்கு உதித்ததுதான் அரசியல் பிரவேசம். கட்சி ஆரம்பித்தார்.தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று பெயரும் சூட்டினார். கட்சியின் பெயராவது தனது சுய சிந்தனையில் உதித்த பெயரை வைத்தாரா ?. அதுவுமில்லை. கட்சிக்கு பெயர் வைக்க இவர் திரும்பிய இடம் தி.மு.க..” திராவிட முன்னேற்ற கழகம் ” என்ற பெயரை காப்பி அடித்து கொஞ்சம் உல்டா பண்ணிமுற்ப்போக்கு திராவிட கழகம் என்று மாற்றி, அதன் முன் தேசிய என்று போட்டுக் கொண்டார்.கட்சியின் பேரைக் கூட சுயமாக சிந்தித்து பெயர் வைக்க தெரியாதவர். கட்சிக்கு பெயர் வைப்பதற்கே இவர் இன்னொரு கட்சியை நாட வேண்டியிருக்கின்றது. அப்படி பட்ட இவரெல்லாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்.ஈ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் கட்சிக் கொடி :கட்சியின் பெயருக்கு தி.மு.கவிடம் இருந்து திருடிய இவர், கட்சிக் கொடியையும் தி.மு.கவிடம் இருந்தே திருட நினைத்தார். அதுவும் நடந்தது.கருப்பு சிவப்பு நடுவே மஞ்சளைச் சேர்த்தார்.கட்சிக் கொடியகிவிட்டது. நீங்களே பாருங்கள் , இவரது கட்சிக் கொடியில் கருப்பும், சிவப்பும் மட்டுமே மேலோங்கித் தெளிவாக தெரிகிறது. இவர் கழுத்தில் இருக்கும் துண்டினைப் பாருங்கள்.உ. கருப்பு எம்.ஜி.யார் - விஜயராஜ் :தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று கட்சியும் ஆரம்பித்து விட்டார். சட்ட சபைத் தேர்தல் வந்தது. பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். கட்சியின் பெயர் சூட்ட தி.மு.க தேவைப் பட்டது.இப்பொழுது அரசியலில், பிரசாரத்தில், மக்களிடம் பிரபலமாக, ஓட்டுக்களை வாங்க இன்னொரு நபரின் பெயர் தேவைப் பட்டது.அவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.யாரின் பெயர்.பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் தன்னை ஒரு கருப்பு எம்.ஜி.யார். என்று கூறி பிரச்சாரம் செய்தார். அவரது ரசிகர்கள் தொண்டர்கள் கருப்பு எம்.ஜி.யார் என்று பேனர்களும் வைத்தனர், அப்படியே கோஷமிட்டனர்.ஆனால் நம் மக்கள், விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.யார் அல்ல அவர் ஒரு வெறுப்பு எம்.ஜி.யார் என்று தங்களது ஓட்டுகள் மூலம் காட்டினர்.எம்..ஜி.யாரின் பெயரைக் கூட சொல்லக் கூட இவருக்கு தகுதியில்லை.இனி வரும் காலங்களில் யாரின் பெயரை தன்னுடன் சேர்க்கிறார் என்று பார்க்கலாம்.இன்று கலைஞரை தாக்கும் இந்த விஜயராஜ் என்ற விஜயகாந்த் தனது அடைமொழியான புரட்சி கலைஞரை நீக்க மனம் உள்ளதா.திராவிட முன்னேற்ற கழகத்தினை, கடுமையாக, வெட்டி பரபரப்புக்காக தாக்கும் நீங்கள் உங்களது கட்சியில் உள்ள திராவிட கழகம் என்று இருப்பதை நீக்கத் தயாரா ?கொஞ்சம் கூட சுய சிந்தனைல இதுவரை ஏதும் பண்ணாத இவர் என்னத்தை பண்ணி கிழிக்க போறார். இதுல ஆட்சி மாற்றம் வரும், தே.மு.தி.க ஆட்சியைப் பிடிக்கும், முதல்வர் ஆவேன் என்று வெட்டி வாய்ச் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates