jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி แสดงบทความทั้งหมด

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு 22 சதவீத சம்பள உயர்வு:அமைச்சர் பௌசி


பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டத்தின் தீர்வாக மூன்று வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் சம்பள உயர்வின் 22 சத வீதத்தினை இம்மாதம் முதல் வழங்குவதாக தெரிவித்த பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ,இவர்களின் நிலுவையிலுள்ள சம்பளத்தினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஆரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கையினை முன்வைத்து நாளை முதல் மூன்று தினங்களுக்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகார சபை, தேசிய நீர் வழங்கல் அதிகார சபை, மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய நான்கு நிறுவனங்களிலும் சட்டப்படி வேலைப் போராட்டத்தினை தொடரவுள்ளன.

இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பெற்றோல் விநியோக நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாளைய தினம் பெற்றோலிய ஊழியர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினை எதிர் கொள்ளும் முகமாக மக்கள் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வாகனங்களுடன் வரிசையில் நிற்பதை கணக் கூடியதாக இருந்தது.இதனால் கொழும்பின் பல பாகங்களிலும் பெற்றோல் கூட்டுத்தாபன நிலையங்களில் இட நெரிசல் ஏற்பட்டதுடன் வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

மேற்படி நிறுவன ஊழியர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கும் சம்பள உயர்வில் 2009ஆம் ஆண்டுக்கான உயர்வு இது வரை வழங்கப்படாமையே இப்போராட்டத்துக்கான காரணமாகும். இதேவேளை இப் போராட்டத்தின் ஆரம்பகட்டமாக சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நேற்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்க்கு முன்னால் ஊழியர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates