jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் แสดงบทความทั้งหมด

இதொகாவிலிருந்து விலகுவதாக யோகராஜன் - சச்சிதானந்தன் அறிவிப்பு


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சச்சிதானந்தன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளனர்.

இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்களாக இருந்துவந்த இவர்கள் கட்சித் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே விலகியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி தலைமைத்துவம் மக்களின் நலன் கருதி செயற்படுவதில்லை என பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேவேளை பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களை அமைச்சிலிருந்து செல்லுமாறு உயர் அதிகாரி ஒருவர் பணித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் அலுவலர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates