jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஈரான் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஈரான் แสดงบทความทั้งหมด

அரச எதிர்ப்பாளர்கள் எழுவர் ஈரானில் கைது


ஈரானில் அரச எதிர்ப்பாளர்கள் எனக் கருதப்படும் ஏழு பேர் இன்று பிற்பகலில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐவர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராகப் பலர் கூடிநின்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் முறுகல் ஏற்பட்டது. இந்த முறுகலில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அந்நாட்டு அரசியலில் முக்கிய இடம் வகிப்பவர்கள் என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அவர்களின் முழுமையான பெயர் விபரங்களைப் பாதுகாப்புத் துறை வெளியிடவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

57 வது இஸ்லாமிய மாநாடு: ஈரான் ஜனாதிபதி துருக்கி விஜயம்

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் துருக்கியில் நடைபெறும் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இஸ்தான்புல் சென்றார்.

இஸ்லாமிய நாடுகளின் மாநாடு துருக்கியின் தலைநகர் இஸ்தான் புலில் நேற்று நடைபெற்றது. இம் மாநாட்டில் 57 இஸ்லாமிய நாடுக ளின் தலைவர்கள் பங்கேற்றனர். துருக்கி சென்ற ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற அஹ்மெதி நெஜாத் துருக்கிய பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர் களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். துருக்கிய பிரதமர் தையிப் எர்டோகனுடன் முக்கிய பேச்சு க்களில் ஈடுபட்டார்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈரான் தலைநகர் இடம் மாறுகிறது


ஈரான் தலைநகர் தெஹ்ரான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதி்ப்புக்குள்ளாகி வருவதால் தலைநகரை இடம் மாற்ற அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடும் நில நடுக்கப் பகுதியி்ல் அமைந்துள்ள நிதெஹ்ரானை படுமோசமான நிலநடுக்கம் தாக்கும் என்று சர்வதேச புவியியல் நிபுணர்கள் எச்சரித்து வருவதால் ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து தலைநகரை இடமாற்றம் செய்யலாம் என்று அந் நாட்டு மத-அரசியல் தலைவர் ஆயதுல்லா கொமேனி தெரிவித்த யோசனையை அந் நாட்டு அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டது.

புதிய தலைநகர் எங்கு அமையும் என்று தெரியவில்லை.

ஈரானிய அரசியல்-சமூக வரலாற்றில பல தலைநகரங்கள் இருந்து வந்துள்ளன. இதில் இஸ்பகான், கஸ்வின், ஷிராஸ், மஷ்ஷத், ஹமேடான் ஆகியவை அடங்கும்.

கடைசியாக 1795ம் ஆண்டில் நாட்டை ஆண்ட ஆகா முகம்மத் கான் தான் தெஹ்ரானை தலைநகராக்கினார். அன்று முதல் தெஹ்ரானே இந் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதா, கலாச்சாரத் தலைநகராக விளங்கி வருகிறது.

இப்போது இந்த நகரில் 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு இந்த நகரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 40,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்தே தலைநகரை மாற்றினால் தான் தெஹ்ரானில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிர் பலிகளையும் குறைக்க முடியும் என்ற யோசனைகள் தீவிரமாயின.

பூமிக்கு அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரும் பெரும்பாறைத் திட்டுக்களின் மீது தான் தெஹ்ரான் அமைந்துள்ளது. இந்த நகரும் திட்டுக்களால் தான் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

அடிக்கடி நகர்ந்து இவை மிகவும் இலகுவாகிவிட்டதால் விரைவிலேயே வரலாறு காணாத அளவுக்கு இப் பகுதியில் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈரானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் உயர்மட்ட கட்டளைத் தளபதிகள் பலர் பலி

தென் கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையைச் சேர்ந்த அநேக உயர்மட்ட கட்டளைத் தளபதிகள் பலியாகியுள்ளனர்.

சிஸ்டான்பலுசிஸ்டான் மாகாணத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் குறைந்தது 29 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பிராந்திய மலைப் பிரதேச தலைவர்களை சந்திப்பதற்காக பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்ற வேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. மேற்படி குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மாகாணத்தில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஜுன்டால்லாஹ் போராளி குழுவே இத்தாக்குதலுக்கு காரணமென குற்றஞ்சாட்டப்படுகிறது.

இத்தாக்குதலில் இறந்தவர்களில் புரட்சிகர காவல் படையின் மாகாண தலைமை கட்டளைத் தளபதி ரஜாப் அலி மொஹமட்ஸாடெஹ் மற்றும் காவற்படையின் பிரதி கட்டளைத் தளபதி ஜெனரல் நூர் அலி ஷýஷ்தாரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயகர் அலி லாரிஜானி, ""இந்தப் படுகொலைகளுக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தாக்குதல் சிஸ்டான்பலுசிஸ்தான் மாகாணத்தின் பாதுகாப்பை சீர்குலைப்பதே பயங்கரவாதிகளின் நோக்காக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது'' என்று கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates