jkr
แสดงบทความที่มีป้ายกำกับ உடல் நலம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ உடல் நலம் แสดงบทความทั้งหมด

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்


தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை.

நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகிவிடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோயும் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கொரேனெரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரு ட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டாவதாக இடம் பெறட்டும்.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்த தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல் படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

பலமான விருந்தின்போது கேக், மட்டன் முலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும்.

இந்த வகையில் தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவதும் நல்லதாக அமைகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

: அதிர வைக்கும் நோய் !

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நலம் பெற வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும் நாம் ?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மன சோர்வு ஏன் ஏற்படுகிறது

எண்ணங்கள் தாம் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி நல்லெண்ணங்கள் நம்மை உயர்த்தி, உடல் நலனுக்கும் உறுதுணையாக இருக்கின்றன. இன்று கல்வி, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறும் நாம் மனச்சோர்வினால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். மனச்சோர்வின் விளைவுகள் என்ன? நமக்கு ஏதோ எல்லாமே இழந்து விட்டது போன்ற ஏமாற்ற உணர்வுகள், தாழ்வு மனப்பான்மை செயலில் ஆர்வமில்லாமை போன்ற உணர்வுகள் அவ்வப்போது வரச் செய்கின்றன. இந்த மனநிலை தொடரும்போது, மகிழ்ச்சியான மன நிலை குறையத் தொடங்கிவிடும். ஒரு இனம்புரியாத சோகம் தன்னையே நிலை குறையத் தொடங்கிவிடும். ஒரு இனம்புரியாத சோகம், தன்னையே நொந்து கொள்ளுதல் போன்ற நிலை உண்டாகும். நகைச்சுவையான சம்பவங்கள் கூட, முகத்தில் புன்னகையை உண்டாக்க முடியாது.

இந்த நிலையில், நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் நமக்கெதிராகச் செயல்டுவது போன்ற எண்ணமும், நமது வாடிக்கையாளர்களே நம்மிடம் நம்பிக்கையிழந்து விட்டது போலவும் தோன்றும். வார்த்தைகளில் விரக்தியும், வேதனையும் மிஞ்சும். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் போது உடலில் பல்வேறு நோய்களாக உருவெடுக்கின்றன. இடுப்புவலி, தலைவலி, வெவ்வேறு பாகங் களில் உண்டாகும் வலிகள், ஜீரணக்கோளாறு கள், தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி போன் றவை வரலாம். பல மாதங்களாகத் தொடரும் இந்த மனநிலை இறுதியில் தற்கொலையில் வந்து முடிவதுண்டு. இன்றைய செய்தித் தாள்களைப் புரட்டினால் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்துவரை தற்கொலைச் செய்திகளை பார்ப்போம். அதன் அடிப்படைக் காரணம் இந்த மனச்சோர்வுதான்.

பெரும்பாலும், பொருளாதர பிரச்சினைகளும் காம உணர்வு பிரச்சைகளுமே பல சிக்கல்களுக்குக் காரணம். திடீரென்று தமது தொழிலில் பெரு நட்டம் ஏற்படும்போது, நேசிக்கும் ஒருவரை இழக்க நேரிடிடும் போது மனம் சோர்வடைந்து விடுவது இயற்கை. இந்த இழப்புகள் சில மாதங்களில் குறைந்து வழக்கமான சூழ்நிலைக்கு வந்து தயாராகி விடுகிறோம். சிலர் போதைப்பொருட்களுக்குப் பழக்கமாகி மனச்சோர்வு அடைவதுண்டு. இதுபோல் எந்தக் காரணம் இன்றியும் நமக்கு மனச்சோர்வு வரலாம். அதற்கு முக்கிய காரணம் நமது எண்ணங்கள் தான்.

வாழ்க்கைக்கு அடிபடைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகள் கிடைத்ததும், நமது நலன், சுற்றத்தாரின் நலன் என நமது விருப்பங்கள் வளருகின்றன. இதற்கு மேலாக மேலும் முக்கியமாகச் சமுதாயத்தில் நமக்கென ஒரு அந்தஸ்து வேண்டுமென விரும்புகிறோம். அந்த அந்தஸ்து, முக்கியத்துவம் நாம் வாழ்கின்ற சூழ்நிலையில் கிடைத்தாதபோது மனச்சோர்வு உண்டாகிறது.

நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கம் மிகவும் மோசமானது. "நாளை செய்வோம்' இதை உடனே செய்தால் என்ன வரப்போகிறது. என்று நாம் தள்ளிப்போடும் பல சிறு விஷயங்கள் நாளடைவில், பெரியமலையாக நம்முன் தோன்றி நம்மை மலைக்க செய்கின்றன. மனச்சோர்வும் பெருகுகிறது.

நாம் நம்புவது, எதிர்பார்ப்பது, செய்வது எல்லாம் நியாயத்தின் அடிப்படையா? என்பதை நாமே அறிய வேண்டும். 1 ரூபாய்க்கு லொத்தர் சீட்டு வாங்கி சட் டைப்பையில் போட்டுக் கொண்டு இலட் சாதிபதியாவோம் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஒவ்வொரு பொரு ளுக்கும் ஒரு விலை மதிப்பு உண்டு. அந்த விலையைக்கொடுத்துத்தான் நாம் பெற முடியும். உயர்ந்த எண்ணமும், கடின உழைப்பும் தான் சாதனைக்கு நாம் தரக்கூடிய விலை. அதற்கு மாற்று ஏதுமில்லை. நம் உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றில்லா மலிருக்கலாம். அதன் முழுப்பலன் ஒரு மாபெரும் சாதனையாக ஒருநாள் வெளிப் படும். உழைப்பு ஒரு போதும் வீணா வதில்லை.

மனச்சோர்வுள்ளவர்கள் எதையும் நம்ப மாட்டார்கள். என்ன வசதி வாய்ப்புகளிலிருந்தாலும் அதில் அவர்களுகுத் திருப்தி இருக்காது. அதிலுள்ள சிறு சிறு குறைகளே பெரிய பிரச்சனையாகத் தோன்றும். உதாரணத்திற்கு நமக்குள்ள சிறு உடல் வலியையும் தாங்க மாட்டார்கள். ஒரு மருத்துவரிடம் சென்றால் அவருடைய சிகிச்சையில் நம்பிக்கையில்லாமல் அடிக்கடி வெவ்வேறு மருத்துவரை நாடுவார்கள். மனித வாழ்க்கைக்கு நம்பிக்கைதான் உயிர்மூச்சு. அதை வளர்ப்பது ஒரு சிறந்த கலை. நம்பிக்கையிருந்தால் மலையையும் நகர்த்த முடியும். என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சக்தி கொண்டது நம்பிக்கை. அது தானாகவே வருவதில்லை. நாம் படிப்படியாக வளர்க்க வேண்டிய ஒன்று. நாம் ஒரு செயலைச் செய்து முடித்து வெற்றி காணும்போது நமக்குள்ளே நம்பிக்கை பிறக்கும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates