jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கனடாவிலுள்ள அவரது மகள் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கனடாவிலுள்ள அவரது மகள் แสดงบทความทั้งหมด

வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை


இலங்கை அரசாங்கம் காலமானதாக அறிவித்துள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

"விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மகளிடமோ,டென்மார்க்கிலுள்ள அவரது மகனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

இந்நிலையில் கனடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று , நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.

அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன். இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates