jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சினிமா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சினிமா แสดงบทความทั้งหมด

கில்லி.. இந்தியில் பிரபுதேவா ரீமேக்!


விஜய் நடித்து பெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபு தேவா.

ரீமேக் கிங் என்ற பட்டம் ஜெயம் ராஜாவுக்குப் பிறகு, இன்றைய தேதிக்கு பிரபு தேவாவுக்குதான் சரியாகப் பொருந்தும்.

தமிழ் அல்லது தெலுங்கி்ல் வெற்றி பெற்ற படங்களை அப்படியே ரீமேக்கி பெரிய இயக்குநராகிவிட்டார்.

தெலுங்கு போக்கிரியை தமிழ்ப் போக்கிரியாக்கி, இந்தியிலும் சல்மான் கானை வைத்து வான்டட்-ஆக மாற்றி வெற்றி பெற்றார்.

இதே பாணியில் இப்போது தமிழில் விஜய் நடித்து வெற்றி பெற்ற கில்லியை இப்போது இந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்கிறாராம் (அபிஷேக் அங்கேயும் கபடிதான் ஆடுவாரா... அதாவது செமி பைனலில் தோற்றுவிட்டு பைனலுக்கு வரும் சூப்பர் கபடி!!)

தமிழில் ஜெயம் ரவியை வைத்து பிரபுதேவா இயக்கும் 'பாரீஸ்' படம் முடிந்த பிறகு, 2010-ல் இந்தி கில்லி தொடங்குமாம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சாதி அமைப்பிடம் விவேக் கெஞ்சல்


தனது படங்களில் சாதிக்கு எதிராக முழக்கமிடும் விவேக், கடைசியாக சரண்டர் ஆகியிருப்பது ஒரு சாதி அமைப்புக்கு முன்! அட, இதென்ன புதுக் கதை? புதுக் கதையெல்லாம் இல்லை. எனக்கு பின்னால் மூன்று கோடி முக்குலத்தோர் இருக்கிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தவர்தான் விவேக். இப்போது பிரச்சனை என்றதும் சாதி சங்க கூட்டத்திற்கே போய் முழங்கிவிட்டு வந்திருக்கிறார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டாராம் விவேக். அப்போது, எனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் வழக்கு போடுகிறார்கள். எனக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறும் முயற்சியும் நடக்கிறது. எனக்கு ஆதரவாக நீங்கள் களம் இறங்க வேண்டும் என்றாராம்.

விவேக்கை மட்டும் தனிமை படுத்தி பதிவு செய்யப்படும் வழக்குகள் என்றால் நாம் துணை நிற்போம். மற்றபடி எல்லா நடிகர்கள் மீதும் வழக்கு பாய்ந்தால், அதில் நடிகர் சங்கம்தான் தலையிட வேண்டும். நம்மால் முடியாது என்று தனது ஆதரவாளர்களை கலந்து பேசி முடிவெடுத்தாராம் இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சேதுராமன்.

விவேக் படங்களில் இனி ஒரு விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. அது சாதிக்கு எதிரான அவரது…. பொய் முழக்கம்! ஏனென்றால் ‘படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோவில்’ என்ற அவரது சித்தாந்தம் இனிமேலும் எடுபடாதல்லவா?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சூர்யாவுக்கு வெட்டு… வடிவேலு மகிழ்ச்சி


ஆதவன் படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் ஃபீல் பண்ணுவதால், இருபது நிமிட காட்சிகளை வெட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தனது உதவி இயக்குனர்களை எல்லா தியேட்டர்களுக்கும் அனுப்பி இந்த வேலையை கன கச்சிதமாக செய்ய உத்தரவிட்டிருக்கிறாராம் கே.எஸ்.ரவிகுமார்.

படத்தில் ரசிக்கக் கூடிய பகுதிகள் எவை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அவர், ‘வெட்டு’ குறிப்புக்குள் கொண்டு வந்த காட்சிகள் அத்தனையும் சூர்யா சம்பந்தப்பட்டது. அதிலும் சூர்யா மவுத் ஆர்கான் ஊதிக்கொண்டே அறிமுகம் ஆகும் அந்த காட்சியில்தான் முதலில் கத்தரியை வைத்தாராம். (இந்த காட்சியை சூர்யாவின் ரசிகர்களே விரும்பவில்லை என்பது வேறு விஷயம்)

வடிவேலு வருகிற எந்த காட்சியிலும் தப்பி தவறி கூட கை வைத்துவிட வேண்டாம். இன்னும் நீளத்தை குறைக்க விரும்பினால் அது சூர்யாவின் பகுதிகளாக இருக்கட்டும் என்று கூறப்பட்டிருக்கிறதாம். இந்த வெட்டு தீர்மானத்திற்கு திரையரங்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது வடிவேலு வட்டாரத்தை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால் படத்தின் நாயகனே இவர்தான் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த வெட்டுக்கு பிறகு, இந்த தோற்றம் இன்னும் அழுத்தமாக வெளிப்படுவதுதான் வைகைப்புயலின் கொண்டாட்டத்திற்கு காரணமாம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மீண்டும் மீனா... 'விடாதே பிடி'!


திருமணம் , ஹாலிடே, ஹனிமூன் எல்லாம் முடிந்து, மீண்டும் நடிக்க வருகிறார் மீனா.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வேன் என்று ஏற்கெனவே கூறியிருந்த மீனா, சொன்ன வாக்கைக் காப்பாற்ற கலைச்சேவையில் முழு வீச்சில் இறங்குகிறார்.

அவர் நடிக்கவிருக்கும் முதல் படத்துக்கு விடாதே பிடி என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இயக்குபவர் காமடிப் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு இடம் பிடித்த டிபி கஜேந்திரன்.

இந்தப் படத்தில் மீனாவுக்கு ஜோடியாக நடிப்பவர் பிரபு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடிப் படத்தில் இருவரும் ஜோடி சேருகிறார்கள்.

இப்போது மீனாவுக்கு விடாதே பிடி தவிர புதுப்படங்கள் எதுமில்லை. டிவி டாக் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates