jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சிவனேசத்துரை சந்திரகாந்தன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சிவனேசத்துரை சந்திரகாந்தன் แสดงบทความทั้งหมด

புலிகளின் தலைவரை கூட்டமைப்பினரே பிழையாக வழி நடத்தினார்கள்: சந்திரகாந்தன் குற்றச்சாட்டு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தவறாக வழி நடத்தி அழிவுப் பாதைக்குக் கூட்டிச் சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிக்குடிக்கான டிப்போ நிர்வாகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கட்டடத்தை போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

சந்திரகாந்தன் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

தமிழ் மக்களின் அழிவுக்கெல்லாம் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். பிரபாகரன் விட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவரை தவறான பாதைக்கு இட்டுச் சென்றவர்களும் இந்தக் கூட்டமைப்பினரே ஆவர். தமிழர்கள் சுயமாகச் சிந்தித்து செயற் பட முடியாத அளவுக்கு பிரபாகரன் எடுத்த முடிவுகளுக்கு இவர்களே பிரதான காரணமாக உள்ளனர். தமிழ் மக்களின் நலன்களை எண்ணிப் பார்க்காதவர்களின் பின்னால் கிழக்கு மாகாண மக்கள் ஒரு போதும் நிற்கவே மாட்டார்கள்.

இவ்வைபவத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், போரதீவுப் பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ். சுபைர் மற்றும் பி.பிரசாந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கு மாகாணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

கிழக்கு மாகாணம் தொடர்பாக பல் வேறு துறைகளில் ஆய்வுகளை மேற் கொண்டு 6 மாத காலத்திற்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு பல்லைக்கழக கல்வி சார் துறையினரைக் கேட்டுள்ளார்.

நேற்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் ,பீடாதிபதிகள் ,விரிவுரையாளர்கள் ஆகியோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

பல்கலைக்கழகம் எதிர்நோக்குகின்ற சவால்கள் ,பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும் பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதோடு அதற்கான தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

"கிழக்கு பல்கலைக்கழகமானது கிழக்கு மாகாணத்தின் மிகவும் பெரிய ஓர் சொத்தாகும். இதனைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இம் மாகாத்ணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளின் கடமையாகும்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வளங்கள் இனங்காணப்பட்டு அது தொடர்பான பல ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் இதற்கான நிதி மாகாண சபை ஊடாக வழங்கப்படும்." என இக் கலந்துரையாடலில் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்

" கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கின்ற சான்றுகள், தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள், கிழக்கு மாகாணத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரையான எல்லை நிர்ணயம், குடிசனப்பரம்பல் மற்றும் வளர்ச்சி வீதம்,இம் மாகாணத்தில் புற்று நோய் அதிகரிப்பிற்கான காரணம் விவசாயம் ,மீன்பிடி, உல்லாசம்,சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் "எனவும் கேட்டுக் கொண்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates